சுடச்சுட

  
  hc

  அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை ஓவியங்களை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தை தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் தாக்கல் செய்தார்.

  அதில் அரசு ஸ்மால் பஸ்களில் இடம்பெற்ற இரட்டை இலை ஓவியம் அதிமுக சின்னம் போல் தோற்றம் அளிக்கிறது. ஆகையால் அதிமுகவின் நடமாடும் பிரசார வாகனமாக அவை இடம்பெறாத வகையில் இலை வடிவ ஓவியத்தை மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

  தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக சார்பில் வழக்குரைஞர் மனோஜ் பாண்டியன் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்த மனு, நீதிபதி ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அதிமுக சார்பில் மூத்த வழக்குரைஞர் முத்துகுமாரசாமி வாதிட்டார். அப்போது மக்களவைத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் பட்டியலிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ராஜேந்திரன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை (மார்ச் 17) நடைபெறும் தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

  ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை வடிவங்கள் அரசியல் கட்சியின் பிரசார வாகனம் போன்று உள்ளதாகவும், அதனால் அதை மறைக்க வேண்டும் என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வருவதற்கு முன்பாக உரிய விளக்கத்தை அளிப்பதற்கான நோட்டீûஸயோ அல்லது உரிய வாய்ப்பையோ மனுதாரருக்கு வழங்கவில்லை.

  எனவே இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது மற்றும் நியாயமானது அல்ல என அதிமுகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai