சுடச்சுட

    

    வரும் மக்களவைத் தேர்தலில் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஞானதேசிகன், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர்கள் ஞானசேகரன், எச். வசந்தகுமார், பொருளாளர் கோவை தங்கம், மாநிலப் பொதுச்செயலாளர்கள் கே. சிரஞ்சீவி, விடியல் சேகர், மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன் (தென் சென்னை), ரங்கபாஷ்யம் (மத்திய சென்னை) உள்ளிóட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களில் பெரும்பாலானோர், காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை அனுபவித்த மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம். கிருஷ்ணசாமி, பிரபு மற்றும் தற்போதைய எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றுவார்கள்; மக்களிடமும் நம்பிக்கை ஏற்படும். அதன் மூலம் அதிக வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸின் வாக்கு சதவீதமும் அதிகரிக்கும். அப்போதுதான் வருங்காலங்களில் மற்ற கட்சிகள் காங்கிரûஸ தேடி வருவார்கள். பெயர் தெரியாதவர்களை தேர்தலில் நிறுத்தினால் கிடைக்கும் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும். வாக்கு சதவீதம் குறைந்தால் இப்போது இருக்கும் மரியாதையும் இல்லாமல் போய்விடும்.

    இந்தத் தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்தி கணிசமான வாக்குகளைப் பெறாவிட்டால் இனி வரும் தேர்தல்களில் ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகள் கிடைக்கும் என எச்சரித்துள்ளனர்.

    அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட ஞானதேசிகன் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களின் கருத்துகளை கட்சி மேலிடத்திடம் கூறி ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலுக்காக நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் வாசன் ஆதரவாளர்கள் மட்டுமே அதிக அளவில் பங்கேற்றனர். ப. சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட மற்ற கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் ஒரு சிலரே பங்கேற்றனர்.

    தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற முக்கியத் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai