சுடச்சுட

  

  தமிழகத்துக்கு அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் கிருஷ்ணா நீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். அதன்படி, கடந்த சில மாதங்களாக கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், கடந்த 10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

  ஆந்திர விவசாயிகளின் பாசனத்துத்துக்காக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தமிழகத்துக்கு தாற்காலிகமாக நீர்வரத்து தடைபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

  சென்னையின் குடிநீர் விநியோகத்தில் கிருஷ்ணா நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்வரும் கோடையைக் கருத்தில் கொண்டு தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், கிருஷ்ணா நீரைத் திறந்து விடுவது குறித்து ஆந்திர அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

  இதையடுத்து, அடுத்த மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதாக ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

  இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆந்திர மாநிலத்தில் 2-வது பாசன காலம் நடைபெற்று வருவதால், தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

  அடுத்த 20 நாள்களுக்குள் மீண்டும் கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விநாடிக்கு 500 கன அடி நீர் தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளது' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai