சுடச்சுட

    

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் பாஜ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.சரவணபெருமாள் அளித்துள்ள கோரிக்கை மனுவின் விவரம்:

    மக்களவைத் தேர்தல் பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்த உள்ளது. ஆனால், சில மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தேர்தல் பணியில் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை ஈடுபடுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இச் செயல்கள் தேர்தலை நியாயமாக நடத்த முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சீர்குலைப்பது போன்று அமைந்துவிடும். எனவே, அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் பாஜக கேட்டுக் கொண்டுள்ளது

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai