சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்ச் 17-இல் முடிவு

    By dn  |   Published on : 15th March 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து, திருச்சியில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐ.ஜே.கே.) மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ய இருப்பதாக, அந்தக் கட்சியின் பிற மாநிலங்களுக்கான அமைப்புச் செயலர் சேலம் இரா.லட்சுமணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    பாஜக கூட்டணியின் உத்தேச பட்டியல் தொலைக்காட்சிகளில் வெளியானது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அந்தப் பட்டியல் உண்மையானதாக இருந்தால், எங்கள் கட்சி அதற்கு அதிருப்தி தெரிவித்துக் கொள்கிறது.

    தமிழகத்தில் பாஜகவை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத நேரத்தில், நரேந்திர மோடியை அழைத்து வந்து மாபெரும் கூட்டத்தைக் கூட்டி, அதை பாஜக பெயரில் நாங்கள் நடத்தினோம்.

    நாங்கள் சந்தர்ப்பவாதத்துக்காக பாஜகவுடன் கூட்டணி சேரவில்லை. மாறாக, அவர்களின் கொள்கைக்காகவே கூட்டணி வைத்தோம்.

    தொடக்கத்தில் நாங்கள் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்டோம். அதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளை மதித்து கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளைக் கேட்டோம். கள்ளக்குறிச்சி தனது சொந்தத் தொகுதி என்பதால், எங்களது கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அந்தத் தொகுதியின் தற்போதைய திமுக எம்.பி. ஆதிசங்கர் செய்யாததையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளார்.

    எங்கள் கட்சிக்கு கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். ஒருவேளை அப்படி ஒதுக்கப்படாவிட்டால், வருகிற 17-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு, பாஜக கூட்டணியில் தொடருவது குறித்த இறுதி முடிவை பாரிவேந்தர் வெளியிடுவார் என்றார் லட்சுமணன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai