சுடச்சுட

    

    புதிய பொறியியல் கல்லூரி தொடங்க பல்கலை.யிடம் விண்ணப்பித்தால் போதும்: யுஜிசி

    By dn  |   Published on : 15th March 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழி காட்டுதலின்படி, புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க இனி அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் விண்ணப்பித்தால் போதுமானது.

    இதன் மூலம் கல்லூரிகளும் கல்வி அறக்கட்டளைகளும் தங்களுடைய தேவைகளுக்காக இனி தில்லிக்கு அலையத் தேவையில்லை.

    பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அதிகாரத்தின் கீழ் இருந்தபோது, புதிய கல்லூரிகள் தொடங்கவும், புதிய படிப்புகளைத் தொடங்கவும் முதலில் ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இணைவு அந்தஸ்து, அல்லது அனுமதியைப் பெறவேண்டும்.

    இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் மூலம், நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் யுஜிசி-யின் கீழ் வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கான இறுதி செய்யப்பட்ட "யுஜிசி வழிகாட்டுதல் 2014' பொதுமக்களின் பார்வைக்காக ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய பொறியியல் கல்லூரி தொடங்குவது, புதிய படிப்பைத் தொடங்குவது என்பன உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் அந்தந்த பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்தால் போதுமானது.

    புதிய பொறியியல் கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அறக்கட்டளைகள் கல்லூரி நடைமுறை செலவுகளுக்காக வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 1 கோடியும், கல்லூரி பெயரில் நிரந்த வைப்பு நிதியாக ரூ. 30 லட்சமும் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் புதிய கல்லூரி தொடங்கவும், புதிய பொறியியல் பட்டப் படிப்பைத் தொடங்கவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் ரூ. 2 லட்சமும், பிற கல்வி நிறுவனங்கள் ரூ. 3 லட்சமும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai