சுடச்சுட

    

    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

    By dn  |   Published on : 15th March 2014 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidhi

    முஸ்லிம்களுக்கு திமுக துரோகம் இழைத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    அதிமுக ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதில் உண்மையில் இல்லை. திமுக ஆட்சியில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதிமுக ஆட்சியில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக ஜெயலலிதா கூறி வருகிறார்.

    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது உண்மையென்றால், தற்போது அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் இடஒதுக்கீடு கொடுக்காதது ஏன்? திமுக சார்பில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தோர் 2 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் 2 முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தலா 1 தொகுதி கொடுத்துள்ளோம். இதன் மூலம் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம்.

    ஆனால் அதிமுக சார்பில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவருக்குத்தான் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து முஸ்லிகளுக்கு யார் துரோகம் இழைக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai