Enable Javscript for better performance
வருமான வரி செலுத்தாத 1,409 நிறுவனங்கள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1,409 நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருமான வரித் தொகையை அரசுக்கு செலுத்தாதது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வருமான வரி முதன்மை ஆணையர் எஸ்.ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், கட்டுமானம் மற்றும் துறைமுகம் சார்ந்த நிறுவனங்கள், காற்றாலை நிறுவனங்கள், படத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 1,409 பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், கடந்த 2010-11, 2011-12-ஆம் நிதியாண்டுகளில், தங்கள் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருமான வரித் தொகையை (டி.டி.எஸ்.) அரசுக் கணக்கில் செலுத்தாதது தெரிய வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் தொகையை வட்டியும், அபராதமும் சேர்த்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai