Enable Javscript for better performance
வாகனச் சோதனையின் போது தகுந்த ஆவணங்கள் எவை? தங்க நகை வியாபாரிகள் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    வாகனச் சோதனையின் போது தகுந்த ஆவணங்கள் எவை? தங்க நகை வியாபாரிகள் கேள்வி

    By dn  |   Published on : 15th March 2014 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் வாகனச் சோதனையின் போது காண்பிக்க வேண்டிய தகுந்த ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்படும் தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்களைக் காட்டி பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஆனால், தங்க நகைகளை பழுது பார்க்கவோ, பாலீஷ் செய்யவோ, ஹால்மார்க் முத்திரை பெறவோ எடுத்துச் செல்லும் போது அவற்றுக்கு எத்தகைய ஆதாரங்களைக் காட்ட முடியும் என்று நகை வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். அதில், வணிகம் செய்வதற்காக வணிக வரித் துறையிடம் இருந்து பதிவு எண் பெறப்பட்ட சான்றிதழின் நகல், நகை வியாபாரிகள் சங்கத்தின் அடையாள அட்டை, விற்பனை செய்ததற்கான ரசீது அல்லது தங்க ஆபரணம் செய்வதற்கான தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட நகைக் கடையிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி ரசீது ஆகியவற்றை ஆவணங்களாகக் காட்ட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai