Enable Javscript for better performance
ஸ்மால் பஸ்களில் இலை ஓவியங்களை மறைக்க வேண்டும்: பிரவீண்குமார்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்மால் பஸ்களில் இலை ஓவியங்களை மறைக்க வேண்டும்: பிரவீண்குமார்

    By dn  |   Published on : 15th March 2014 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    praveenkumar_election_commi

    சென்னையில் இயக்கப்பட்டு வரும் ஸ்மால் பஸ்களில் இலை வடிவ ஓவியங்களை மறைக்குமாறு, போக்குவரத்துத் துறைக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், தமிழக அரசின் ஸ்மால் பஸ்கள், குடிநீர் பாட்டில்கள், அரசு அலுவலகங்கள் உள்பட அரசின் சொத்துகள் ஆகியவற்றில் உள்ள முதல்வரின் படங்கள், சின்னங்கள் ஆகியவற்றை அகற்றவும், மறைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து, தனது பதிலை தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அளித்தது.

    அரசு ஸ்மால் பஸ்களில் இடம்பெற்றுள்ள இலை ஓவியங்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் போன்று உள்ளன. எனவே, அவை நடமாடும் பிரசார வாகனங்களாக இடம்பெறாத வகையில் அவற்றை மறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தனது பதிலில் தெரிவித்திருந்தது.

    தமிழக அரசுக்கு கடிதம்: தேர்தல் ஆணையத்தின் பதிலைத் தொடர்ந்து, ஸ்மால் பஸ்களில் உள்ள இலை வடிவ ஓவியங்களை மறைக்கும்படி போக்குவரத்துத் துறைக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வியாழக்கிழமையன்று (மார்ச் 13) கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் துறையின் செயலாளருக்கு பி.கே.பிரசாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த கடிதத்தைத் தொடர்ந்து, ஸ்மால் பஸ்களில் உள்ள இலை வடிவ ஓவியங்களை மறைக்கும் நடவடிக்கையில் போக்குவரத்துத் துறை ஈடுபடும் என்று

    தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai