சுடச்சுட

  

  ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இந்தாண்டு (2014) ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் இருந்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்று இருந்தது.

  எண். 13, மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸி டவர், 3-ம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ட்ஹத்ஸ்ரீர்ம்ம்ண்ற்ங்ங்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும் பயன்படுத்தலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு மார்ச் 15-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிப்பு செய்து மாநில ஹஜ் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  அதன்படி, வரும் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கால நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பு ஹஜ் குழுவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai