சுடச்சுட

  
  aap

  ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியிடப்படுகிறது.

  தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்காக அனைத்துத் தொகுதிகளிலும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 40 தொகுதிகளுக்கும் தகுதியான நபர்கள் இல்லாவிட்டால், கிடைத்துள்ள தகுதியான நபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி தொகுதிகளைத் தேர்வு செய்வது எனவும் முடிவு செய்துள்ளது.

  இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு முறையே உதயகுமார், மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோர் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  இவை தவிர கரூர், சேலம், நீலகிரி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளிலும் மேலும் 2 தொகுதிகளையும் தேர்வு செய்திருப்பதாக அக் கட்சியினர் கூறுகின்றனர். திங்கள்கிழமை (மார்ச் 17) 8 முதல் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆம் ஆத்மி கட்சியை தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினரே முன்னெடுத்துச் செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே, கட்சியின் தலைவர் கேஜரிவால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி வேட்பாளர்களின் மனு தாக்கலுக்கு கண்டிப்பாக தமிழகம் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொடர்பாக, கேஜரிவாலிடமும் வலியுறுத்தப்பட்டிருப்பதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் சகாயராஜ் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai