Enable Javscript for better performance
5 தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர்: அறிவித்தார் விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    5 தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர்: அறிவித்தார் விஜயகாந்த்

    By dn  |   Published on : 15th March 2014 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijay

    மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். முதல் பட்டியலில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்தார். வேட்பாளர்கள் விவரம்:

    வடசென்னை - எம்.சவுந்திரபாண்டியன்

    மதுரை - சிவமுத்துக்குமார்

    திருச்சி - ஏ.எம்.ஜி.விஜயகுமார்

    திருவள்ளூர் (தனி) - வி.யுவராஜ்

    நாமக்கல் - என்.மகேஷ்வரன்

    பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தேமுதிக - பாமக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை மாலை வரை இந்தப் பிரச்னை நீடித்தது. இதனால் பாமக உள்ளிட்ட இதரக் கட்சிகளோடு பிரச்னை இல்லாத 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் அறிவித்தார்.

    முதல் கட்டப் பிரசாரத்தை வெள்ளிக்கிழமையே விஜயகாந்த் தொடங்கினார். கும்மிடிப்பூண்டியில் நடந்த பிரசாரத்தின்போது திருவள்ளூர் (தனி) தொகுதி வேட்பாளரையும், திரு.வி.க. நகரில் வடசென்னை வேட்பாளரையும் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். சவுந்திரபாண்டியன் தேமுதிவின் தொழிற்ச பேரவை செயலாளராக இருந்து வருகிறார். மதுரை வேட்பாளர் சிவமுத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும், திருச்சி வேட்பாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் தேமுதிகவின் மாணவரணி செயலாளராகவும் இருந்து வருகின்றனர். நாமக்கல் வேட்பாளர் மகேஷ்வரன் மாணவரணியின் துணை செயலாளராக இருந்தவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai