சுடச்சுட

  

  கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சம்பத் மீது திமுக புகார் அளித்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம், அந்தக் கட்சியின் தலைமை நிலைய வழக்குரைஞர் ஐ. பரந்தாமன் சனிக்கிழமை மனு அளித்தார். அதில், கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எம்.சி.சம்பத் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொலைக்காட்சிகளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகள் அடங்கிய சி.டி.யையும் இந்த புகார் மனுவுடன் இணைத்துள்ளேன்.

  எனவே, அவற்றை ஆய்வு செய்து தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய அமைச்சர் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் பரந்தாமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai