சுடச்சுட

    

    அரசியல் நிலைப்பாட்டில் அதிமுக தடம்புரண்டது: தா. பாண்டியன்.

    By dn  |   Published on : 16th March 2014 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thapandiyan

    அரசியல் நிலைப்பாட்டில் அதிமுக தடம்புரண்டுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

    திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் அளித்த பேட்டி:

     கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறிவந்த அதிமுக, தற்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது.

    முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தடம்புரண்டிருக்கிறார். வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்று பேசிய பிறகு, தற்போது எந்தக் கூட்டங்களிலும் பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடுவதில்லை.

    அவர்கள் பாஜகவின் திசை நோக்கிச் செல்வதாகவே தெரிகிறது. இல்லையென்று அவர்கள் வாயால் எதுவும் சொல்லவும் இல்லை. எனவே, ஒன்று அதிமுக பாஜகவுடன் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இடதுசாரிகளுடன் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இருவருடனும் நட்புடன் இருக்க முடியாது.

    எனவே எதிர்காலத்திலும் இதுதான் எங்களின் அரசியல் நிலைப்பாடு.

    அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததற்கும் இதுதான் காரணம். தொகுதிப் பங்கீடு அல்ல.

    மார்ச் 19-இல் பட்டியல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்த பிறகு மாவட்டக் குழுக்கள் வேட்பாளர் பட்டியலைப் பரிந்துரை செய்துள்ளன. மாநிலக் குழுவிலும் வேட்பாளர் பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டது.

    9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் நிறுத்தப்படுகின்றனர். பெண் வேட்பாளர்களும் உண்டு.

    மார்ச் 16-ஆம் தேதி சென்னையில் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தேசியத் தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே, மார்ச் 19-இல் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்.

    18 இடங்கள் தவிர்த்து, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் அவை சார்ந்த கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை. வேறு யாரேனும் ஆதரவு கேட்டு வந்தால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கலந்து பேசி முடிவெடுப்போம்' என்றார் பாண்டியன்.

    பேட்டியின்போது, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன், தென்காசி மக்களவை உறுப்பினர் பொ. லிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai