சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கடலில் மீன்பிடித்தபோது, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    வேளாங்கண்ணி அருகே கடலோரக் காவல் படை போலீஸார் கடந்த பிப்ரவரி 9-இல் ரோந்துப் பணி மேற்கொண்டபோது, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  இதையடுத்து, அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர்களின் காவல் மார்ச் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியா-இலங்கை மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையையொட்டி, சிறையிலிருந்த 25 மீனவர்களும், விடுவிக்கப்பட்டுள்ளனர் என நாகை ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

    17-ஆம் தேதி இலங்கைப் பயணம்: இலங்கை மீனவர்கள் 25 பேரும்  நாகை அழைத்து வரப்பட்டு, இங்கு தங்க வைக்கப்படுவர். 17ஆம் தேதி இலங்கை மீனவர்கள் 25 பேரும் கடலோரக் காவல் படை மூலம் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai