Enable Javscript for better performance
எங்களை வெளியேற்றினாலும் திமுகவில்தான் இருப்போம்: மு.க.அழகிரி- Dinamani

சுடச்சுட

    

    எங்களை வெளியேற்றினாலும் திமுகவில்தான் இருப்போம்: மு.க.அழகிரி

    By dn  |   Published on : 16th March 2014 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    azagiri

    கட்சியில் இருந்து எங்களை வெளியேற்றினாலும் திமுகவில்தான் இருப்போம் என்று திமுகவின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும் மதுரை மக்களவை உறுப்பினருமான மு.க.அழகிரி கூறினார்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு சனிக்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

    எனது ஆதரவாளர்களுடன் திங்கள்கிழமை (மார்ச் 17) ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவாளர்களுடன் கலந்துபேசி எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன். திமுக தலைமையில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. கட்சியில் இருந்து எங்களை வெளியேற்றினாலும் நாங்கள் திமுகவில்தான் இருப்போம்.

    காங்கிரஸ் ஆட்சியைப் பாராட்டிப் பேசியிருக்கிறீர்களே எனக் கேட்டதற்கு, நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தானே இருந்தோம். என்னைப் பொருத்தவரை காங்கிரஸ் அரசு நல்லது செய்துள்ளது. எனது துறையின் மூலமாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்கு காங்கிரஸ் அரசின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன என்றார். திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர் எனக் கேட்டதற்கு, நான்கு மாவட்டங்களில் இருந்து அழைத்துள்ளேன். அதிகம் பேர் வருவர் என்றார். ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு, அவர் எனக்குத் தேவையில்லை என்று பதில் அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai