சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம்: நாராயணசாமி பேச்சு

    By dn  |   Published on : 16th March 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    15pyp1

    என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் நீடிப்பதாக மத்திய அமைச்சரும், புதுவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வி.நாராயணசாமி கூறினார்.

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவி விக்டோரியா தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி.சுப்பிரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்று நாராயணசாமி பேசியது: கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சட்டம் உள்பட பல்வேறுத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி பாதிப்படையாமல் இருந்தது.

    என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்: புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.

    பாமக அங்கு நீடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தனியாகவே தேர்தலைச் சந்திக்கும். புதுச்சேரியில் மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் பெரும்பங்காற்றி உள்ளது. 17 ரயில்கள் காரைக்கால், புதுவைக்கு விடப்பட்டன.

    புதிதாக 4 மேம்பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், காரைக்காலில் வளர்ச்சித் திட்டங்கள் என மொத்தம் ரூ.770 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

    ஆனால் என்.ஆர். காங்கிரஸ் அரசு செயலிழந்த அரசாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த திட்டங்களை நிறுத்தி விட்டு, தேர்தல் நடப்பதால் அவற்றை மீண்டும் தொடங்குகின்றனர். இந்தியா முழுவதும் மோடி அலை எதுவும் வீசவில்லை. அவ்வாறு வீசினால் பாதுகாப்பான தொகுதியைத் தேடி மோடி ஏன் ஓட வேண்டும் என்றார் நாராயணசாமி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai