சுடச்சுட

  

  கச்சத்தீவு திருவிழா: புதுகை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லத் தடை

  By dn  |   Published on : 16th March 2014 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  fishermen2

  கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெறும் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

  கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. அதில் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

  இந்நிலையில், மீனவர்கள் வெள்ளிக்கிழமை வார ஓய்வு எடுத்த நிலையில், சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனைவரும் தயாராக இருந்தனர்.

  ஆனால், அவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், மீனவர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

  மீன்வளத் துறையினரின் இத்தகைய நடவடிக்கையால், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்களில் சுமார் 650 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai