Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா இன்று பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    kriadmk

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அப்பகுதி கொடி, தோரணங்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் க.காமராஜை ஆதரித்துப் பேச ஜெயலலிதா, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சி வருகிறார்.

    28 ஏக்கரில்...: இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் உலகங்காத்தானில் ஆற்காட் மில் அருகே சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரசாரப் பொதுக்கூட்ட மைதானத்தை வந்தடைகிறார்.

    வழியெங்கும் வரவேற்பு: வழியெங்கும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று தோரண வளைவுகள், பதாகைகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

     கட்சிக் கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரசாரப் பொதுக்கூட்டத்தின்போது மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைவர் என்று கூறப்படுகிறது.

    நாடாளுமன்றம் வடிவில்...: பொதுக்கூட்ட மேடை நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்ட முகப்பு வாயிலில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேடையின் முன்பு சுமார் 40 அடி தூரத்துக்கு பேரிகாடுகள் கட்டப்பட்டுள்ளன.

    மேடை அருகே முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று ராட்சத கேஸ் பலூன் பறக்கவிடப்பட்டுள்ளன. 

    பலத்த பாதுகாப்பு: பொதுக்கூட்டத்துக்கு லட்சக் கணக்கானோர் திரண்டு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹெலிகாப்டர் இறங்குதளம், பொதுக்கூட்ட இடம் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai