சுடச்சுட

    

    காங்கிரஸார் தைரியமாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் : ப. சிதம்பரம்

    By dn  |   Published on : 16th March 2014 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16cdm

    தமிழகத்தைப் பொருத்தமட்டில் "கை' மெலிந்து, பலவீனமாகத்தான் உள்ளது. அந்த கைக்கு உரமேற்றி தைரியமாக தேர்தலை காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திக்க வேண்டும். தமிழக மக்கள் அதற்கான பலனை நிச்சயம் தருவார்கள் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

     தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ப.சிதம்பரம் பேசியதாவது:

    தமிழகத்தில் தற்போது யாருடனும் காங்கிரஸ் கூட்டணியில் இல்லை. காங்கிரஸýடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்த சூழ்நிலையில் விலகிச் சென்றன என்பது குறித்து பேசப் போவதில்லை.

    காங்கிரஸ் என்பது புதிய கட்சி ஒன்றுமில்லை. இந்தியாவில் காங்கிரஸ் 8 தலைமுறைகளை கண்டுள்ளது. சுமார் 130 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கட்சி. உலகில் வேறு எந்த நாடுகளிலும் ஒரே கட்சி எட்டு தலைமுறைகளைக் கண்டது இல்லை. அந்தப் பெருமை காங்கிரஸýக்கு உண்டு. இந்த பாரம்பரியமிக்க கட்சியின் ஆட்சிக் காலத்தில் சில தவறுகளையும், தொய்வுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்திருக்கலாம்.

     காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்விகளைக் கண்டுள்ளது. பல தோல்விகளுக்குப் பின்னர் 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்துள்ளது.

    சுதந்திர இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்தான் 9 சதவீத வளர்ச்சியை எட்டினோம். அதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில், இந்தியா இந்த சராசரி வளர்ச்சியை எட்ட முடியவில்லை. உலக நாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வியக்கும் அளவுக்கு 9 சதவீத வளர்ச்சியை எட்டினோம்.

    தமிழகத்தில் ஏழ்மை நிலை உள்ளது. ஆனால் பட்டினி நிலை கிடையாது. அதற்கு முக்கியக் காரணமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைக் கூறலாம்.

    இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு ஏழை ரூ.148 கூலியாகப் பெற முடியும்

    எங்கள் ஆட்சியில் குறையே இல்லை எனக் கூறவில்லை. நிறை, குறையை விமர்சனம் செய்யுங்கள். அதில் தவறு கிடையாது. கடந்த 10 ஆண்டுகளில் செய்த நல்ல திட்டங்களை சொல்லாததுதான் பெரிய குறை. அதை வைத்துதான் காங்கிரûஸ பலர் குறை சொல்கிறார்கள்.

     தற்போது நாங்கள்தான் பிரதமர் என எல்லோரும் பிரதமர் நாற்காலிக்கு போட்டி போடுகிறார்கள். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரிய கட்சிகள். அவர்களிடம் நான் கேட்பது, யார் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகிக்க போகிறீர்கள் என்பதுதான். இந்த கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளிப்பார் என நம்புகிறேன். ஏனென்றால் 2004-ஆம் ஆண்டில் மதவாத சக்தியுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது எனத் தெரிவித்தவர் அவர். இந்தக் கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதில் கூற தயக்கம் காட்டுவார். தேர்தலுக்குப் பின்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேராது என சொல்ல முடியாது.

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கை மெலிந்து, பலவீனமாகத்தான் உள்ளது.

    அந்த கைக்கு உரம் ஏற்ற முடியும். அப்படி உரமேற்றி  தேர்தலை காங்கிரஸ் உறுப்பினர்கள் தைரியமாக சந்திக்க வேண்டும். தமிழக மக்கள் அதற்கான பலனை நிச்சயம் தருவார்கள் என்றார் ப.சிதம்பரம்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கராத்தே ஆர். தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பி.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai