சுடச்சுட

    

    காங்கிரஸூடன் கூட்டணி வைக்காதவர்கள் தேர்தலுக்குப் பிறகு வருத்தப்படுவார்கள்: ஞானதேசிகன்

    By dn  |   Published on : 16th March 2014 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gnadesikan

    காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காதவர்கள் தேர்தலுக்குப் பிறகு வருத்தப்படுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை சில வாரங்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இந்த சிலைக்குப் பதிலாக வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை சனிக்கிழமை திறந்து வைத்து ஞானதேசிகன் பேசியது:

    தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரûஸ யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லையே என்று மற்ற கட்சியினர் வருத்தப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai