சுடச்சுட

  

  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் கோவையில் "ஆரோக்கியம்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது.

  கோவை மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில்,  45 அரங்குகள் அடங்கிய இந்த மருத்துவக் கண்காட்சி முகாமை கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

  ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) வரை நடைபெறவுள்ள இந்த இலவச மருத்துவக் கண்காட்சியில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் பங்கேற்றுள்ளன.

  இதில் ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, எண்டாஸ்கோப்பி, சர்க்கரை நோய், பல் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இக்கண்காட்சியின் துவக்க விழாவில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் விக்னேஷ் குமார், கோவை பதிப்பு மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai