சுடச்சுட

    

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 16th March 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karuna1

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் திருப்பூரில் பேசும்போது, தமிழகத்தில் மின் உற்பத்தியும் தொழில் வளர்ச்சியும் பெருகி வருவதாகப் பெருமையாகக் கூறியுள்ளார்.

    தமிழக அரசு ஆலங்குளத்திலும், அரியலூரிலும் சிமென்ட் ஆலைகளை நடத்தி வருகிறது. ஆலங்குளம் தொழிற்சாலையில் 2010-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் செய்யப்பட்ட  உற்பத்தி 2.3 லட்சத்து 40 டன்கள் ஆகும். அதிமுக ஆட்சியில் ஆலங்குளத்தில் செய்யப்பட்ட உற்பத்தி 1.34 லட்சத்து 640 டன்களாகும். அரியலூர் தொழிற்சாலையில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட உற்பத்தி 4.90 ஆயிரத்து 35 டன்கள். அதிமுக ஆட்சியில் 3.88 லட்சத்து 55 டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. திமுக ஆட்சியைவிட 1.1 லட்சத்து 980 டன்கள் குறைவு. இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடையாளமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai