சுடச்சுட

  

  தேர்தலில் களமிறங்கியது நமது மக்கள் கட்சி: 16 இடங்களில் தனித்து போட்டி; 7 வேட்பாளர்கள் அறிவிப்பு

  By dn  |   Published on : 16th March 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் நமது மக்கள் கட்சி சார்பில் 16 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 7 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் நமது மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் தலைவர் எம். ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் நமது மக்கள் கட்சி சார்பில், மக்களவைத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

  முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

  தஞ்சாவூர் - எஸ்.எம். மூர்த்தி,

  வேலூர் - எம். கேசவன்,

  விழுப்புரம் - டி. கோவிந்தன்,

  ராமநாதபுரம் - வி. கோவிந்தன்,

  தேனி - எஸ். போஸ்,

  திருப்பூர் - கே.எம். மனோகரன்,

  மதுரை - பி. சாது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

  பின்னர், தலைவர் எம். ராஜமாணிக்கம், பொதுச் செயலர் எஸ்.எம். மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

  முத்தரையர்களை திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எந்தக் கட்சியும் கண்டு கொள்வதில்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் முத்தரையர்களுக்கு கட்சிப் பதவிகள் மறுக்கப்படுகின்றன. அதிமுகவின் தேர்தல் வெற்றியில் முத்தரையர் பங்கு அதிகம் உள்ளது. தேசியக் கட்சிகளும் எங்களை கண்டு கொள்வதில்லை. ஆகையால் நாங்கள் நேரடியாக தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளோம்.

  முத்தரையர் சமுதாய மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் போதும். வேறு யாருடைய வாக்கையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றனர். 

  கூட்டத்தில் பொருளாளர் வீரையா, துணைத் தலைவர் கோவிந்தன், மாநில இளைஞரணி செயலர் டி. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai