சுடச்சுட

  

  தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 16th March 2014 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திப்பவர் ஜெயலலிதா என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

   திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் சி. தேவதாச சுந்தரத்துக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு ஸ்டாலின் தனது பிரசாரத்தை திருநெல்வேலி தொகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கினார். முதல் இடமாக தாழையூத்திலும் பின்னர், திருநெல்வேலி நகரம் வாகையடிமுக்கு சந்திப்பிலும், சீதபற்பநல்லூரிலும் பேசினார். திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் அவர் பேசியது:

  தமிழகத்தில் சில கட்சிகளும், கட்சித் தலைவர்களும் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களைச் சந்தித்து வருகிறார். ஆனால், எந்த நேரத்திலும் மக்களைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது திமுக மட்டுமே.

  தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக குறிப்பிடும்படி ஏதுவும் செய்யவில்லை.

  தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சி அமைத்தது. 5 முறையும் மக்களுக்காக எத்தனையோ திட்டங்களையும், சாதனைகளையும் செய்துள்ளோம்.

  அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. மாறாக விலைவாசி உயர்வுக்குதான் வழிவகை செய்துள்ளது.

  திமுக ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் செல்ல ரூ.9 ஆக இருந்த கட்டணம், அதிமுக ஆட்சியில் ரூ.21 ஆக உயர்ந்துள்ளது. பால் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.

  மத்திய ஆட்சியில் தொடர்ந்து அங்கம் வகித்தும் தமிழகத்துக்கு திமுக எதுவும் செய்ததில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா புகார் கூறுகிறார். எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். திருநெல்வேலி மாநகராட்சிக்கு கட்டடம் கட்டவும், ரூ.23 கோடியில் குடிநீர்த் திட்டம், மேம்பாலம் உள்ளிட்டவற்றைத் தந்தது. எனவே, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பேராதரவு தர வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai