சுடச்சுட

  
  azhakiri

  முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரியை, தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

     திமுக கோஷ்டிப் பூசல் தொடர்பாக மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திமுகவின் செயல்பாடுகளை கடுமையாக மு.க.அழகிரி விமர்சித்து வருகிறார். மேலும், சமீபத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோவைச் சந்தித்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். வெள்ளிக்கிழமை சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.

     மு.க.அழகிரியின் செயல்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அவர் திங்கள்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதால், திமுக வட்டாரத்தில் அக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மு.க.அழகிரி சென்னையிலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை பகலில் வந்தார். வீட்டில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரான காங்கிரசைச் சேர்ந்த ஜே.எம்.ஆரூண் மதுரைக்கு வந்தார். அவர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் மாலை 6.20 மணிக்கு சந்தித்தார்.

     தனியாக மு.க.அழகிரியைச் சந்தித்துப் பேசிய ஜே.எம்.ஆரூண் பின்னர் 6.50 மணிக்கு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,  காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேனியில் போட்டியிட்ட எனக்காக மு.க.அழகிரி பிரசாரம் செய்தார். அதற்காக நன்றி தெரிவித்தேன். அத்துடன் தற்போதும் நான் தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அவரிடம் கூறினேன். எனக்காக பிரசாரம் செய்வது குறித்து அவர்தான் கூற வேண்டும் என்றார்.

   அழகிரியைச் சந்தித்த ஜே.எம்.ஆரூண் தனக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவளிக்கக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. சந்திப்பு குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என மதுரை காங்கிரஸ் பிரமுகர்கள் கூறினர்.

    திமுக வேட்பாளர்:  திமுக மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி மதுரையில் பிரசாரத் தொடக்கத்தின்போது மு.க.அழகிரியை சந்திக்கப் போவதாக தெரிவித்தார். ஆனால், சனிக்கிழமை அவர் அழகிரியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai