சுடச்சுட

  

  வாகனச் சோதனையால் உண்மையான வணிகம் பாதிக்கப்படவில்லை: பிரவீண்குமார்

  By dn  |   Published on : 16th March 2014 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்படும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையமே வரையறுப்பது இயலாத விஷயம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

  ஒவ்வொரு விதமான வணிகத்துக்கும் ஒவ்வொரு வகையான ஆவணங்கள் இருப்பதால், குறிப்பிட்டு வரையறை செய்ய முடியாது என கூறியுள்ள அவர், வாகனச் சோதனைகள் தொடரும்; இதனால் உண்மையான வணிகம் ஏதும் பாதிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

  இது குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பிரவீண்குமார் சனிக்கிழமை அளித்த பேட்டி:

  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் அந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பயன்படுத்தப்படலாம்.

  மேலும், பொதுமக்கள், வியாபாரிகள் பணத்தை எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். தகுந்த ஆவணங்கள் எவை? என்று வரையறுத்துக் கூற வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுகின்றனர். ஒவ்வொரு விதமான வணிகத்துக்கும், வெவ்வேறு ஆவணங்கள் இருப்பதால், அறுதியிட்டு ஆவணங்களை வரையறுக்க முடியாது. சோதனையின் போது, மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான அதிகாரிகள் உடனிருப்பதால், அவர்கள் ஆய்வு செய்து சட்ட வரையறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

  வணிக நடைமுறை பாதிப்பில்லை: சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் உள்ளிட்டவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமே இருக்கும். அவர்களிடம் உரிய ஆவணங்களைக் காண்பித்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேர்தலை ஒட்டி நடத்தப்படும் இந்தச் சோதனைகளால் உண்மையான வணிக நடைமுறைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

  இலை வடிவ ஓவியங்கள்: சென்னையில் இயக்கப்பட்டு வரும் ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை வடிவ ஓவியங்களை மறைக்கும்படி போக்குவரத்துத் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை அவகாசம் அளிக்க வேண்டுமென போக்குவரத்துத் துறை பதில் அளித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

  பெண் ஊழியர்களுக்கு சலுகை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் பணியாற்ற முடியாத ஊழியர்கள், அதற்கான உண்மையான காரணத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எடுத்துரைத்து பணியில் இருந்து விலக்கு பெறலாம்.

  மேலும், பெண் ஊழியர்கள் இரவில் வாக்குச் சாவடிகளில் தங்குவதைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று சேரும் விதமாக அவர்களுக்கு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளி-கல்லூரி ஊழியர்களை சில மாவட்டங்களில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது.

  2-வது மிகப்பெரிய சவால்: தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளின் மூலம் ரூ.6.85 கோடி ரொக்கப் பணமும், சேலைகள், நகைகள் என்ற வகையில் ரூ.46 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  வாக்காளர்களுக்கு சாப்பாடு போடுவது போன்ற நடவடிக்கைகள் இப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவது என்பது இரண்டாவது சவாலாக உள்ளது என்றார் பிரவீண்குமார்.

  செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இணை தலைமை தேர்தல் அதிகாரி (ஐ.டி.,) அஜய் யாதவ், மற்றொரு இணைத் தலைமை தேர்தல் அதிகாரி (ஊடகப் பிரிவு) சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

  மறைந்த தலைவர்கள் சிலைகளை மறைக்கத் தேவையில்லை

  மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மறைந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு பிரவீண்குமார் அளித்த பதிலில், "கட்சித் தலைவர்களின் சிலைகளை மட்டுமே மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை' என்றார்.

  எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குச்சாவடி விவரம்

  செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய வசதியை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி (ஐ.டி.,) அஜய் யாதவ் வெளியிட்டார். அதன்படி, 94441 23456 என்ற செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

  இந்த செல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப செய்ய வேண்டிய விவரம்: உடஐஇ என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். சில விநாடிகளில் உங்களது பெயர், வாக்குச்சாவடி எண், அதனுடைய முகவரி, பாகம் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  செல்போனில் புதிய வசதி: வாக்குக்கு பணம் கொடுத்தால் அதனை பெறக் கூடாது எனவும், அப்படி பணம் கொடுக்க கட்டாயப்படுத்தினால் அதனை புகைப்படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதற்காக செல்போனில் தனியான வசதி (ஙஞஆஐகஉ அடடந) உருவாக்கப்படும். இந்த புதிய வசதி அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரவீண்குமார் தெரிவித்தார்.

  தேர்தல் புகார்களா?

  இலவச தொலைபேசி எண்கள் வெளியீடு

  மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்டம் வாரியாக 11 இலக்க இலவச தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

  திருவள்ளூர் - 18004257013

  சென்னை - 18004257012

  காஞ்சிபுரம் - 18004251214

  வேலூர் - 18004257014

  கிருஷ்ணகிரி - 18004257076

  தருமபுரி - 18004257017

  திருவண்ணாமலை - 18004257015

  விழுப்புரம் - 18004257018

  சேலம் - 18004257050

  நாமக்கல் - 18004257021

  ஈரோடு - 18004257022

  நீலகிரி - 18004257025

  கோவை - 18004257024

  திண்டுக்கல் - 18004257026

  கரூர் - 18004257029

  திருச்சி - 18004257030

  பெரம்பலூர் - 18004257031

  கடலூர் - 18004257019

  நாகப்பட்டினம் - 18004257034

  திருவாரூர் - 18004257035

  தஞ்சாவூர் - 18004257036

  புதுக்கோட்டை - 18004257033

  சிவகங்கை - 18004257037

  மதுரை - 18004257027

  தேனி - 18004257028

  விருதுநகர் - 18004257039

  ராமநாதபுரம் - 18004257038

  தூத்துக்குடி - 18004257040

  திருநெல்வேலி - 18004257041

  கன்னியாகுமரி - 18004257042

  அரியலூர் - 18004257032

  திருப்பூர் - 18004257023

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai