சுடச்சுட

  
  vnr15cash

  தமிழகம் முழுவதும் தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.11.67 லட்சம் ரொக்கம் மற்றும் 180 சில்வர் குடங்கள் பறிமுதல் செய்யப்

  பட்டன.

  விருதுநகர்- சிவகாசி சாலையில் மத்திய சேனை என்ற இடத்தில் தேர்தல் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

  அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, சிவகாசியைச் சேர்ந்த சீனிவாசன், பழனிச்சாமி ஆகியோரிடம் இருந்த ரூ.5.78 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

  விசாரணையில், இருவரும் விருதுநகர் அடுத்த மேல ஆமத்தூரிலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் உதவி காசாளர்களாக பணிபுரிவதும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க சிவகாசியிலுள்ள வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

  அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, காரில் வந்த பரமக்குடியைச் சேர்ந்தவர் நாகராஜனிடம் இருந்து ரூ.1.14 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி விலக்கில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் மூகாம்பிகாவைச் சேர்ந்த அனில்குமாரிடம் இருந்து ரூ.3.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லட்சுமணன் காரில் இருந்த ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  திருச்சி: திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கும்பகோணத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த 180 சில்வர் குடங்களை பறிமுதல் செய்தனர்.

  அந்தக் குடங்களுக்கு யாரும் உரிமை கோராததால் அவை, திருச்சி வட்டாட்சியர் மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai