Enable Javscript for better performance
28 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டி - Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும், முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் சனிக்கிழமை திருவள்ளூரில் வெளியிட்டார்.

    சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்புபோது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோர் கூறியது:

    பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்த தொகுதிகளான 39  தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.  கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்  பெறுவோம் என்றனர்.  இந்நிகழ்ச்சியின்போது, மாநிலச் செயலர் முருகன், மாநிலப் பொருளர் அப்சல், மாவட்டச் செயலர் அம்பேத் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai