சுடச்சுட

  

  அன்புமணிக்கு மாற்றுக் கட்சியினரும் வாக்களிப்பர்: ராமதாஸ் நம்பிக்கை

  By dn  |   Published on : 17th March 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pmk

  தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி வெற்றி பெறுவதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் உள்ள நமது சொந்தங்களும் அதிகமாக வாக்களிப்பர் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

  தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாமக கூட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அன்புமணி ராமதாûஸ அறிமுகம் செய்து ராமதாஸ் பேசியது: அதிமுக, திமுகவினர் உங்களிடம் ஓட்டு கேட்டு வருவார்கள். அவர்களிடம் ஏமாறாதீர்கள். பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்த பார்முலா தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் நடக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பணம், பசப்பு வார்த்தைக்கு விலை போகாதவர்கள் நீங்கள்.

  கடந்த 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி பாமக ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வந்தது. அதில் 2 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். தற்போது அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், அப்போது பெற்ற வாக்குகளை 3 அல்லது 4 மடங்கு பெருக்கி இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். சிங்கங்கள் சிறுநரிகளிடம் ஒரு போதும் பிச்சை கேட்காது.

  தருமபுரி தொகுதியில் மெளனப் புரட்சி காத்திருக்கிறது. அன்புமணி வெற்றிக்கு அதிமுக, திமுகவில் உள்ள நமது சொந்தங்களும் அதிகளவில் வாக்களிப்பர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தத் தொகுதியில் பாமக அலை மட்டுமே தெரிவதைப் பார்க்கிறேன். பாமக நடத்துவது நாணயமான அரசியல். வியாபாரம் அல்ல.

  தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற பாமக ஒத்துழைப்பு தரத் தயாராக இருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  2016ஆம் ஆண்டு பாமக தலைமையில் புதிய ஆட்சி அமையும். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாமக தயாரித்து வைத்திருக்கிறது. எங்கள் கட்சி போராட்டம் நடத்தியிருக்காவிட்டால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்து இருக்காது என்றார் ராமதாஸ்.

  கூட்டத்தில் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.குரு, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பேசினர்.

   

  அன்புமணி உள்பட வேட்பாளர்களாக இருவர் அறிவிப்பு

  தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக அறிவித்தது.தருமபுரியில் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாûஸ அந்தக் கட்சி நிறுவனர் ராமதாஸ் முதலில் அறிவித்தார். பின்னர், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் ஆத்தூர் சண்முகம் பாமக வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai