சுடச்சுட

  

  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு: ஆ.ராசா குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 17th March 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  raja

  2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்படவில்லையென நிதித் துறை செயலர், நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.

  நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார். சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் பகுதியில் தி.மு.க. தேர்தல் அலுவலங்களைத் திறந்துவைத்து ஆ.ராசா பேசியது:

  2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 கோடி சம்பாதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் வருமான வரித் துறையினர் எனது சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், ஒரு பைசாகூட கிடைக்கவில்லையென நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

  அதேபோல, 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் இல்லையென நிதித் துறை செயலர், நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  தற்போது, தீர்ப்புக் கூறும் தருணம் வந்துள்ளது. ஜெயலலிதாவைப் போல நான் வாய்தா வாங்க மாட்டேன். உதகையில் நிலச்சரிவு ஏற்பட்டபோது ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒரே வாரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன்.

  சத்தியில் உள்ள அஞ்சல் நிலையங்களை நவீனப்படுத்தியது, சார்பு நீதிமன்றம் அமைத்தது போன்ற பல திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

  புன்செய் புளியம்பட்டி நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.அன்பு, சத்தி ஒன்றியச் செயலாளரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எல்.பி.தர்மலிங்கம், சத்தி நகர செயலாளர் எஸ்.ஆர்.வேலுசாமி, சத்தி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், நகர பொறுப்பாளர் எஸ்.பி.வெங்கிடுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai