Enable Javscript for better performance
அழகிரிக்கு காங்கிரஸ் மீது தனிப்பற்று உண்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பிரசார ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்ஏ.வி. ஜெயபிரபாகர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜெயபிரபாகர் கூறியதாவது: தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கருதப்படும் ஜே.எம்.ஆரூண் எம்.பி. மதுரையில் மு.க.அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். திமுகவிலிருந்து விலகியுள்ள மு.க.அழகிரி எப்போதும் காங்கிரஸ் மீது தனிப் பற்றுடையவராக இருந்துவருகிறார். சமீபத்தில் கூட பிரதமரைச் சந்தித்துள்ளார். ஆகவே மு.க.அழகிரி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் திமுகவில் அழகிரி ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் காங்கிரஸýக்கு ஆதரவளித்தால் காங்கிரஸின் வலிமை கூடும் என்றார் அவர்.

    அழகிரியை ஆரூண் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அழகிரியின் ஆதரவை கோரியிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai