சுடச்சுட

    
    accident

    ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆள் இல்லாத ரயில்வே கேட்டைக் கடந்த மினி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார்; மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

    ராஜபாளையம் அருகே என். புதூரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் திருப்பதிராஜ் (30). இவர் தனது உறவினர் முருகனின் மகன் திருமலைக்குமாருடன் (13) ஞாயிற்றுக்கிழமை மாலை மினி வேனில் கால்நடைத் தீவனம் ஏற்றிக் கொண்டு என்.புதூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    என்.புதூரிலுள்ள ஆள் இல்லாத ரயில்வே கேட்டை வேன் கடந்தபோது அந்த நேரத்தில் மானாமதுரை நோக்கிச் சென்ற விரைவு ரயில், மினி வேன் மீது மோதியது. இதில் மினி வேன் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. இந்த விபத்தில் சிறுவன் திருமலைக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவர் 8ஆம் வகுப்பு படித்துவந்தார்.

    பலத்த காயமடைந்த திருப்பதிராஜ் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai