Enable Javscript for better performance
இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தது திமுகதான்- Dinamani

சுடச்சுட

    

    இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தது திமுகதான்

    By dn  |   Published on : 17th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Khader

    இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது திமுகதான் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.

    தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியில் 4 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியான கூட்டணி. இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தது அதிமுகதான் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமியர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது திமுக மட்டும்தான். இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து 3 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது திமுகதான். அதை 5 சதவீதமாக உயர்த்தித் தருவதாக முதல்வர் அறிவித்திருந்தால் அதை வரவேற்கலாம். இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரித்து தருவதற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

    மக்கள் தெளிவாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு கட்சியின் கொள்கை அறிந்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai