சுடச்சுட

  

  சிதம்பரம் மக்களவைத் (தனி) தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிதம்பரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடிபுகுந்துள்ளார்.

  கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி முதல்வர் வருகைக்கு முன்பு சிதம்பரம் மேலபுதுத் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்த இவர், தேர்தல் முடியும் வரை சிதம்பரத்தில் தங்கி தேர்தல் பணியாற்றுவார் எனத் தெரிகிறது.

  அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளை செங்கோட்டையன் தினமும் சந்தித்து ஆதரவு திரட்டி

  வருகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai