சுடச்சுட

    

    சேலத்தை தேமுதிகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு: பாமக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

    By dn  |   Published on : 17th March 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cadet

    பாஜக கூட்டணியில் சேலம் மக்களவைத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியால் அதிருப்தியடைந்த பாமகவினர், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வருகிற மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் பாமக போட்டியிடும் என்றும், அந்தக் கட்சியின் சார்பில் இளைஞரணி மாநிலச் செயலாளர் ரா.அருள் போட்டியிடுவார் என்றும், அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ரா.அருள் சேலம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வந்தார்.

    இந்த நிலையில், தொகுதி பங்கீட்டில் சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அந்தக் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சேலம் மாநகர, மாவட்ட பாமகவினர் அதிருப்திக்குள்ளாகினர். இந்த நிலையில், சேலம் மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுமார் 50 பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திரண்டனர்.

    அவர்கள் சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்தும், பாஜகவைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தெற்குத் தொகுதி இளைஞரணி துணைச் செயலாளர் கே.கார்த்திக் (25), திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    இதைப் போலவே, சேலம் மாவட்டத்தில் முருங்கப்பட்டி, இளம்பிள்ளை, இரும்பாலை உள்ளிட்டப் பகுதிகளில் ரா.அருளுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai