Enable Javscript for better performance
ஜாதி அடிப்படையில் வேட்பாளர்கள்: நாஞ்சில் நாடன் வேதனை- Dinamani

சுடச்சுட

    

    மாநகரத் தொகுதிகள் தவிர மற்றத் தொகுதிகளில் ஜாதி அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

    தேர்தல் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து:

    மாநகரத் தொகுதிகள் தவிர்த்து மற்ற எல்லாத் தொகுதிகளிலும், பொதுவுடைமைக் கட்சியினர் நீங்கலாக, அனைத்துக் கட்சிகளும் சாதி பலத்தின் அடிப்படையிலேயே வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கின்றன. வேட்பாளர் தேர்வின் போது எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள் எனக் கேட்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்குச்சாவடிக்குப் போக முக்கவும் முனகவும் செய்கிற நமக்கு, குறை சொல்ல என்ன யோக்கியதை உண்டு? சில சமயம் கிழட்டுப் பசு மாடுகள் சினையாகிவிடும். அதனால் கன்று ஈன முக்கவும் இயலாது. முக்கிப் பெற்றுப் போட்ட கன்றை நக்கவும் இயலாது. இந்திய வாக்காளனை நாம் வேறென்ன சொல்வது?

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai