சுடச்சுட

  
  anbumani

  தருமபுரி தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

  இதற்கான அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்.

  கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார் அவர்.

  தற்போது தருமபுரி தொகுதியின் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதர தொகுதிகள் இறுதிசெய்யப்பட்ட பிறகு, அதற்கான வேட்பாளர்களை கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் திங்கள்கிழமை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai