சுடச்சுட

  
  campaign2

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கூட்டணி, உங்கள் வாக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தான் என கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது:

  தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாம்பழக் கூழ் தொழில்சாலையைக் கொண்டு வரவில்லை.

  ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம் இல்லை. சரியான மருத்துவமனை இல்லை. மக்களுக்கு குடிக்க குடிநீர் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர், விவசாயப் பிரச்னைகள் தீர வேண்டும்.

  தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும். இந்தியாவை வல்லரசு ஆக்க வேண்டும். அது உங்கள் கையில்தான் உள்ளது. உங்கள் நடுவிரலில் வைக்கப்படும் மைதான் பேச வேண்டும்.

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. அனைவரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும் என நாங்கள் இங்கே சொல்கிறோம். இந்தியாவில் ஊழல் அற்ற ஆட்சியை நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும் என்றார் விஜயகாந்த்.

   

  தருமபுரியில்...: தொடர்ந்து, தருமபுரி சந்தைப்பேட்டை திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது: மக்களவைத் தேர்தலில் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் மோடிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். ஊழலை ஒழித்து அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார்.

  தருமபுரி மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தவில்லை. மக்கள் கண்களில் கண்ணீர்தான் வருகிறது.

  தமிழகத்தில் ஊழல் இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தியாவில் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

  முன்னர் பாஜகவின் 13 மாத ஆட்சியில் அங்கம் வகித்த ஜெயலலிதா மக்கள் பிரச்னைக்காகப் பேசினாரா? திமுக அரசைத் தான் கலைக்கச் சொன்னார்கள். மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண முன்வராத ஜெயலலிதாவுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்? என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai