சுடச்சுட

  

  தேர்தல் பணிகளை ஒற்றுமையுடன் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்

  By dn  |   Published on : 17th March 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thirumalavan

  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக உழைத்தால் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என திமுகவினருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

  திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகப்படுத்தும் கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசியது: திமுக தலைவர் கருணாநிதியுடன் நாங்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசுகையில், திருவள்ளூர் தொகுதியை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் கருணாநிதிதான் இந்தத் தொகுதியை எங்களுக்கு வழங்கினார்.

  இத்தொகுதியை நாங்கள் பெற்றது, இங்குள்ள திமுக பொறுப்பாளர்கள் முதல் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி வரை பலருக்கு வருத்தம் உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இந்த அளவுக்கு பெரிய கூட்டத்தை இங்கு கூட்டியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திமுகவினர் இத்தேர்தலில் எவ்வித வேற்றுமையும் பாராமல், எங்ககளை முன்னின்று வழிநடத்த வேண்டும். அவ்வாறு ஒற்றுமையாக உழைத்தால் நிச்சமாக வெற்றிக் கணியை பறிக்க முடியும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai