Enable Javscript for better performance
பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்: 19-இல் வெளியீடு?- Dinamani

சுடச்சுட

    
    ila_ganesan

    தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில தேர்தல் குழு இறுதி செய்துள்ளது. இப்பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தென்சென்னை தொகுதியில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் இல.கணேசன் போட்டியிட இருப்பதாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

    தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. தேமுதிகவுக்கு 14 தொகுதிகள், பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் கன்னியாகுமரி, தென்காசி (தனி), ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், தென் சென்னை ஆகிய 8 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

    பாஜக வேட்பாளர்கள்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்-தென்சென்னை, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்-கன்னியாகுமரி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா-சிவகங்கை, கோவையில் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அல்லது மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தென்காசி (தனி) தொகுதியில் அய்யாவழி பாடகர் சிவச்சந்திரன், ராமநாதபுரத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூரில் தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கோவை, திருப்பூர் தொகுதிக்கு கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2009 தேர்தலில் போட்டியிட்ட மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வக்குமார் மீண்டும் வாய்ப்புக் கேட்டு வருகிறார். அதுபோல சொந்த ஊர் என்பதால் கோவையில் போட்டியிட வானதி சீனிவாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai