சுடச்சுட

    

    மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை: தமிழருவி மணியன்

    By dn  |   Published on : 17th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

    கோவையில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகளை ஒன்றிணைத்து மாற்று அணியை உருவாக்க முயற்சித்தேன். இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தனித்தனியே நேரில் சந்தித்து மாற்று அணியை அமைத்தேன்.

    தமிழக தேர்தல் அரசியலில் வாக்காளர்கள் மூன்றாவது அணியை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே, ஆளும்கட்சிக்கு எதிராக வலிமை வாய்ந்த மாற்று அணியை உருவாக்க நினைத்தேன்.

    மக்களவைத் தேர்தலில் 30 சதவீத வாக்குகள் பெற்றால்தான் வாக்காளர்கள் இந்த அணியின் பக்கம் திரும்புவார்கள். அதேவேளையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் அமையும் என்ற அடிப்படையில் வியூகம் அமைத்து மாற்று அணி அமைக்கப்பட்டது.

    கூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயன்றன. ஆனால், சிதையாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

    நரேந்திர மோடி பிரதமராக காந்திய மக்கள் கட்சி முனைப்பாக ஈடுபடும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் காந்திய மக்கள் கட்சியை உரிய மரியாதையுடன் அணுகினால் அவர்களுக்காக காந்திய மக்கள் கட்சி தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.

    நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். தனிப்பட்ட முறையில் யாருக்காகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தேர்தல் முடியும் வரை எந்த தலைவரையும் பார்க்க விரும்பவில்லை. அதேபோல எந்த தலைவரும் என்னை பார்ப்பதை விரும்பவில்லை.

    காந்திய மக்கள் கட்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னலமற்ற இளைஞர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் மோடி பிரதமராக வேண்டி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு காந்திய மக்கள் கட்சியினர் வாக்களிக்க வேண்டும்.

    மாற்று அணியில் விரும்பிய தொகுதியை பெறுதல் உள்ளிட்ட சில தவறான அரசியல் நாடகத்தால்தான் 2 மாதங்களுக்கு மேல் சிக்கல் நீடித்தது. இந்தக் கூட்டணியில் இருந்து எந்தக் கட்சி வெளியே சென்றாலும் அந்த கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai