சுடச்சுட

    

    வணிகர்கள், பொதுமக்கள் மீதான கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்

    By dn  |   Published on : 17th March 2014 03:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    அப்பாவி மக்களையும், வணிகர்களையும் பாதிக்கும் வகையில் வாகனச் சோதனை என்ற பெயரில் கெடுபிடி காட்டுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    மக்களவைத் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

    ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் அப்பாவிப் பொதுமக்களும், வணிகர்களும்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவச் செலவு, வீட்டு விசேஷங்களுக்காக எடுத்துச் செல்லப்படும் பணமும், வணிகத்துக்காக பொருள்களைக் கொள்முதல் செய்ய எடுத்துச் செல்லப்படும் பணமும்தான் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுகின்றன. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணத்தை எடுத்துச் செல்லும்போது அதற்கான ஆவணத்தைக் காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக பணத்தை திரட்டிக் கொண்டும், கடன் வாங்கிக் கொண்டும் செல்லும்போது அதற்கான ஆவணங்களைப் பெறுவது சாத்தியமல்ல. உண்மையாகவே தவறான நோக்கத்துக்காக பணத்தைக் கொண்டு செல்வோர் தங்களின் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி ஆதாரங்களைத் தயாரிக்கும் நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் ஆவணங்களைப் பெற முடியாத அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அப்பாவி மக்களையும், வணிகர்களையும் பாதிக்கும் வகையில் வாகனச் சோதனை என்ற பெயரில் கெடுபிடி காட்டுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்.

    அதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலம் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai