சுடச்சுட

    

    வாகனத் தணிக்கையில் சுவாமி சிலைகள், ரூ.4.95 லட்சம் பறிமுதல்

    By dn  |   Published on : 17th March 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    idol

    சிவகங்கை, நாகையில் தேர்தல் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4.95 லட்சம் ரொக்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுவாமி சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சிவகங்கை-மானாமதுரை சாலையில் தேர்தல் சிறப்பு பறக்கும் படை துணை வட்டாட்சியர் ராஜா முகமது தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4.95 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து, லாரி டிரைவர் நாமக்கல்லைச் சேர்ந்த செல்வராஜிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, ராமநாதபுரத்தில் முட்டை லோடு இறக்கிவிட்டு அதற்கான பணத்தை நாமக்கல்லுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தாராம். ஆனால், இதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நாகை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சோதனைச் சாவடி பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கும்பகோணத்திலிருந்து மகாபலிபுரம் நோக்கிச் சென்ற காரில் சுமார் ஒன்றரை அடி முதல் 2 அடி உயரம் கொண்ட 21 சுவாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.

    கும்பகோணம் பொற்றாமரை குளக்கரையில் உள்ள தனியார் சிலை தயாரிப்புக் கூடத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக மகாபலிபுரத்துக்கு அச்சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து சிலைகளைக் கொண்டு சென்ற இலங்கையைச் சேர்ந்த நசாந்த்ரா ஜெயேந்திராவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai