சுடச்சுட

  
  vijayakanth (2)

  சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தை பாமகவினர் புறக்கணித்து விட்டனர்.

  சேலம் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளராக ரா.அருள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருள் போட்டியிலிருந்து விலக மாட்டார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

  இதனிடையே, இத்தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்க எதிர்ப்புத் தெரிவித்து, சேலத்தில் பாமகவினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

  அப்போது, வேட்பாளரின் பெயரைக் கூறாமல் விஜயகாந்த் தவிர்த்து விட்டு பிரசாரம் செய்தார். மேலும், வேட்பாளரை அடுத்த 2 நாள்களில் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

  இக்கூட்டத்தில், தேமுதிகவின் கூட்டணிக் கட்சிகளான பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், பாமக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai