சுடச்சுட

  

  ஆவணமின்றி ரூ.3 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்: பாஜக

  By dn  |   Published on : 18th March 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PONRADHA

  வணிகர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இது குறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

  தேர்தல் விதிமுறை என்ற பெயரில் நடக்கும் வாகனச் சோதனைகளால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்தக் கெடுபிடிகளால் தமிழகத்தில் வணிகம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் ஆணையம் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

  ஆவணம் இல்லாமல் வணிகர்கள் ரூ.3 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். வணிகர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருந்தால் பணத்தை பறிமுதல் செய்யாமல், சோதனை செய்யும் இடத்திலேயே அவர்களை விடுவிக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai