சுடச்சுட

    
    tvadmk

    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பிரசாரத்துக்காக திருவண்ணாமலை-செங்கம் சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்மாபாளையம் அரசு பால் பவுடர் தொழிற்சாலைக்கு எதிரே பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பிரசாரத் திடலில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிரசார மேடையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை ஹெலிகாப்டரில் வரும் முதல்வர் ஜெயலலிதா, ஹெலிபேடில் இறங்கி அங்கிருந்து காரில் சுமார் பிற்பகல் 3 மணிக்கு பிரசார மேடைக்கு வருகிறார். பின்னர், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் முதல்வர், பிறகு ஹெலிபேட் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    ஏற்பாடுகள் தீவிரம்: பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு வரும் சுமார் 2 லட்சம் அதிமுகவினருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்டச் செயலர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் வி.எஸ்.சேதுராமன், ஆர்.கமலக்கண்ணன், வேட்பாளர் ஆர்.வனரோஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: வடக்கு மண்டல ஐஜி என்.என்.மஞ்சுநாதா தலைமையில் டிஐஜிக்கள் முருகன் (விழுப்புரம்), தமிழ்சந்திரன் (வேலூர்), எஸ்பிக்கள் சரவணன் (திருவள்ளூர்), விஜயகுமார் (காஞ்சிபுரம்), விஜயகுமார் (வேலூர்), மனோகரன் (விழுப்புரம்), ஜெ.முத்தரசி (திருவண்ணாமலை), பாதுகாப்புப் பிரிவு எஸ்பி முத்துசாமி உள்ளிட்ட 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai