சுடச்சுட

    

    இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 24 மீனவர்கள் ராமேசுவரம் வந்தனர்

    By dn  |   Published on : 18th March 2014 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையிலிருந்து விடுதலையான ராமேசுவரம், நம்புதாளை பகுதியைச் சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் 24 பேரும் படகுகளுடன் திங்கள்கிழமை ராமேசுவரம் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.                                                  

    கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற  தங்கச்சிமடத்தைச் சேர்ந்த லீடன் உள்ளிட்ட 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், நம்புதாளை பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 15 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர், மீனவர்களை கடந்த  13 ஆம் தேதி விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் 10 மணிக்கு ஒப்படைத்தனர்.

    24 மீனவர்களும் ராமேசுவரம் துறைமுகப் பகுதிக்கு திங்கள்கிழமை பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai