சுடச்சுட

    

    என்.எல்.சி. துப்பாக்கிச் சூடு: கம்யூனிஸ்ட், மதிமுக கண்டனம்

    By dn  |   Published on : 18th March 2014 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lpmdmk

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜா (28) என்ற ஒப்பந்தத் தொழிலாளர் பலியாகி உள்ளார். தொழிற்சாலைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.பலியான ராஜாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனம் வேலை வழங்க வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: நெய்வேலியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பலியாகி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    இந்தத் தாக்குதலில் தொழிலாளர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: நெய்வேலியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி பலியாகி உள்ளார்.

    சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர்

    மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். தொழிலாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக கைது செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai